சென்னை: தமிழக பாஜக சார்பில் நேற்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்ட டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்களை துன்புறுத்திய தமிழக காவல்துறையின் செயல்பாடு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள ரூ. 1000 கோடி உழலின் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் என்று அண்ணாமலை குற்றம் காட்டியதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழகப் பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை மற்றும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.