சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "டெல்லியின் ஆளுகைக்கு தமிழகம் என்றுமே கன்ட்ரோலில் இருக்காது என்று ஸ்டாலின் பேசி இருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில் என சேர்த்து முதலவர் சொல்லி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் போன்ற தீவிரவாதம் தலை விரித்தாடிய மாநிலங்களையே கன்ட்ரோலில் கொண்டு வந்த மோடி அரசைப் பார்த்து, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?