
பொதுவாக கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடுவர்கள் போட்டிக்கு பயன்படுத்தும் பந்தின் எடை, வடிவம் மற்றும் பந்தின் தன்மை ஆகியவற்றை சோதித்து பார்ப்பார்கள். அனைத்தும் விதிமுறைகளின்படி சரியாக இருந்தால் மட்டுமே அந்த பந்தை பயன்படுத்துவார்கள்.
எம்சிசி கிரிக்கெட் சட்ட விதிகளின்படி பந்துகளின் அளவு குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும். இது ஆடவர், மகளிர், ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தகுந்தவாறு மாறுபடும். ஆடவர் கிரிக்கெட்டில் பந்தின் எடை குறைந்தபட்சம் 155.9 கிராம் எடையும் அதிகபட்சம் 163 கிராம் எடையும் இருக்க வேண்டும். அதேவேளையில் பந்தின் சுற்றளவு குறைந்தபட்சம் 22.4 சென்டி மீட்டரும், அதிகபட்சம் 22.9 சென்டி மீட்டரும் இருக்க வேண்டும்.

