சென்னை: கிறித்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
ஈஸ்டர் முட்டைகள் , பாஸ்கல் முட்டைகள் என்றும் அழைக்கப்படுகின்றன , , இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் . எனவே, ஈஸ்டர் முட்டைகள் பொதுவாக ஈஸ்டர்டைட் (ஈஸ்டர் சீசன்) பருவத்தில் பயன்படுத்தப்படுகின்றன
அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்!
உலகெங்கும் வெறுப்பும். வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்! அன்பே வெல்லட்டும். உலகை ஆளட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post கிறித்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து appeared first on Dinakaran.