நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்து அரை சதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.