சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-03-2025 முதல் 19-03-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். 18-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 38.6° செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5-7° செல்சியஸ் மற்றும் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது.
The post கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.