சென்னை: இந்திய ஆட்சிப் பணிகள் பிரிவின் ஒன்று இந்திய அயலகப் பணி (ஐ.எப்.எஸ்) இப்பிரிவு சார்ந்த அலுவலர்கள் கோபில்லா கிருஷ்ணா ஸ்ரீவத்சவ், கிருஷ்ணகுமார், அனுஜா, சத்யநந்தி, ஹரிசங்கர், அப்துல் பசல், கோகுல் கிருஷ்ணா முதலானோர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். தமிழ்நாடு இந்திய அளவில் பொருளதாரத்தில் சிறந்த 2வது பெரிய மாநிலமாக திகழ்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை விளக்கிடும் கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்கள் தமிழ்நாட்டில் நிறைந்துள்ளன.
பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், அய்யன் திருவள்ளுவர் சிலை, தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் முதலான சுற்றுலாத் தளங்கள் பல தமிழ்நாடு முழுவதிலும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் 10 நாள்கள் தங்கி இவை அனைத்தையும் கண்டு ஆய்வுகள் செய்து மகிழ்ந்திட, இந்திய அயலகப் பணி அலுவலர்கள் 7 பேர் அடங்கிய குழு தமிழ்நாடு வந்துள்ளது. அக்குழு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம்-ஐ சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயலாளர் அமுதா, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
The post கீழடி உள்ளிட்ட தொல்லியல் மையங்கள் ஆய்வு செய்ய வருகை புரிந்த இந்திய அயலக பணி அலுவலர்கள் தலைமை செயலாளருடன் சந்திப்பு appeared first on Dinakaran.