கீவ்: ரஷ்யா -உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. இதனிடையே கடந்த வாரம் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் போரின்போது கைது செய்யப்பட்டவர்களை பரிமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டன. முதல்கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். இந்த பரிமாற்றம் தொடங்கிய சில மணி நேரங்களில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்தது. கீவ்வை சுற்றி வளைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரவு முழுவதும் நகரங்களில் வான்வழித்தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரம் உக்ரைன் ராணுவத்தினால் தாக்குதல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சத்தம் தொடர்ந்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் ரயில்நிலையங்களில் உள்ள சுரங்கபாதைகளில் தஞ்சம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
The post கீவ் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்: இரவு முழுவதும் தொடர்ந்த குண்டுவெடிப்பு சத்தம் appeared first on Dinakaran.