காந்திநகர்: குஜராத்தின் வதோதராவில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் வேகமாக காரை ஓட்டிச் சென்று இரு சக்கர வாகனங்களில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததார்.
இது குறித்து துணை ஆணையர் பன்னா மோமயா கூறுகையில், “இந்த விபத்து அதிகாலை 12.30 மணியளவில் கரேலிபாக் பகுதியில் உள்ள முக்தானந்த் குறுக்குச் சாலையில் நடந்துள்ளது. விபத்துக்கு காரணமான மாணவர் ராக்‌ஷித் சவுராசியா கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை ஓட்டியபோது ரக்‌ஷித் போதையில் இருந்திருக்கலாம். விபத்தில் உயிரிழந்த பெண் ஹேமாலி படேல் என்றும், விபத்து நடந்த போது அவர் அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். மாணவர் ரக்‌ஷித் உத்தரப் பிரதேசத்தின் வாராணசியைச் சேர்ந்தவர். சட்டக் கல்லூரி மாணவரான அவர், இங்கு ஒரு தங்கும் விடுதியில் தங்கி படித்துவருகிறார்.