புதுடெல்லி: தனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது என்றும், வெற்று முழக்கங்களை அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "குடியரசுத் தலைவரின் உரை, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று எனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது. வெற்று முழக்கங்களை அல்ல. ஏழ்மையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை 50 ஆண்டுகளாக நாங்கள் கேட்டோம். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்.