நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற பிரதமர் மோடி அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீ்ப் தன்கருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் நெஞ்சு வலியும், அசவுகரியமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ராஜீவ் நாராங் சிகிச்சை அளித்தார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.