கொடைக்கானல்: கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக வறண்ட சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் அவ்வப்போது காட்டுத்தீ பரவி வருகிறது.
நேற்று மதியம் கொடைக்கானல் கார்மேல்புரம் குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலப்பரப்பில் திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
The post குடியிருப்பு அருகே பற்றியது காட்டுத்தீ: கொடைக்கானலில் பரபரப்பு appeared first on Dinakaran.