மணிகண்டன், ஷான்வே மேக்னா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம், ஜன.24-ல் வெளியானது. சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்த இந்தப் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை அமைத்திருந்தார்.
இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. 10 வருடத்துக்கு முன் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனலை ஆரம்பிக்கும் போதே சினிமா ஆசை இருந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பு அந்த ஆசையை இன்னும் அதிகமாக்கியது. பிறகு இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது.