குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.30-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் டிச.30 முதல் ஜன.1-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முன்னதாக, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என டிச.12-ம் தேதி முதல்வர் அறிவித்தார். இதற்காக, ரூ.10.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.