கும்பமேளாவில் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காட்சியமைப்புகள், ஹீரோயிசம், சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.