பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்து உள்ளனர்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் மகா கும்ப நகர் என்ற பிரம்மாண்ட நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நேரத்தில் ஒரு கோடி பேர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.