குறு,சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இஎஸ்) தொழில்களுக்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்பு மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துளளனர். இவற்றில் 7.5 கோடி பேர் பணியாற்றுகின்றனர். நாட்டின் உற்பத்தியில் எம்எஸ்எம்இஎஸ்-ன் பங்கு 36 சதவீதமாக உள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் எம்எஸ்எம்இஎஸ்-ன் பங்கு 45 சதவீதமாக உள்ளது. இதனால் இந்தியா, உலக உற்பத்தி மையமாக உருவெடுக்கும்.
மத்திய அரிசின் புதிய அறிவிப்பின்படி ரூ.2.5 கோடி முதலீடு செய்து ரூ.10 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனம் குறுந் தொழில் நிறுவனமாக கருதப்படும். ரூ.25 கோடி முதலீடு செய்து ரூ.100 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக கருதப்படும். ரூ.125 கோடி வரை முதலீடு செய்து, ரூ.500 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக கருதப்படும். இந்த அறிவிப்பு எம்எஸ்எம்இஎஸ் நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கான நம்பிக்கை அளித்துள்ளது. மேலும் இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.