புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த விலைக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 மீதான விவாதம் மக்களவையில் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களுக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளித்தார். அப்போது அவர், "இந்தியா தற்போது 39 நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்கிறது. விநியோகத்தைப் பொறுத்தவரை, கயானா, சுரினாம் மற்றும் பிரேசிலில் இருந்து விநியோகம் அதிகரித்துள்ளது. விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை. மலிவான மூலங்களிலிருந்து எரிபொருட்களை நாங்கள் தொடர்ந்து வாங்கி வருகிறோம். இவ்வாறே தொடர்ந்து வாங்குவோம்.