ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் 2022இல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7% ஆக அதிகரித்துள்ளது; அந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,62,000 பாலியல் குற்றங்கள் பதிவானதாகத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துவருவது பொதுத்தளத்தில் அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது.