கூடலூர்: கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் வனத்துறையினரை துரத்தி, கடையை மக்னா யானை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் காட்டு யானை உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவ்வப்போது ஊருக்குள் புகும் காட்டு யானையை வனத்துறையினர் குழுக்களாக இணைந்து விரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இப்பகுதியில் மக்னா யானை உலா வந்தது. இதையறிந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். காட்டு யானை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்ததும், ஜீப்பில் சைரன் ஒலி எழுப்பியவாறு வனத்துறையினர் வந்தனர்.