சென்னை: தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ‘தோழி விடுதி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
24 மணி நேர குடிநீர், சிசிடிவி கேமரா, வைபை, சுகாதாரமான கழிவறை என தனியார் விடுதிகளுக்கு இணையான வசதிகள் தோழி விடுதியில் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் இங்குள்ளன. இந்த விடுதிகளில் மாத அடிப்படையில், நாள் கணக்கில் பெண்கள் தங்கி கொள்ளலாம்.
சமூக நலத்துறை கீழ் இயங்கும் பழைய மகளிர் விடுதிகளை, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் கையகப்படுத்தி மறுசீரமைப்பு செய்து ‘தோழி’ விடுதிகளாகவும் மாற்றி வருகிறது. அதைத் தொடர்ந்து மேலும் 6 இடங்களில் புதிய தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் 2 விடுதிகள் சென்னையிலும், 4 விடுதிகள் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் அமைய உள்ளது.
தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். techexe@tnwwhcl. என்ற இணைய தள முகவரியில் மூலம் சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். tnwwhcl.in என்ற இணைய தளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற தகவல்களையும் பெறலாம்.
* தமிழ்நாடு அரசின் ‘தோழி’ விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
The post கூடுதலாக 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகள்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.