புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி (கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி (போஸ்ட் கிராஜுவேட்) வரை இலவசக் கல்வி வழங்குவோம் என்று பாஜக புதிய வாக்குறுதி வெளியிட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்ட பாஜக, அதன் இரண்டாம் பகுதியை இன்று வெளியிட்டது. பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அதனை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர், "பாஜக தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்ட ஜகத் பிரகாஷ் நட்டா, 2025-ம் ஆண்டுக்கான வளர்ந்த டெல்லிக்கான பாஜகவின் தீர்மானம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். இன்று அதன் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது.