புதுடெல்லி: புதுடெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் ‘பாஜக குண்டர்களால்’ தாக்கப்பட்டது என்று டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, "புதுடெல்லி பேரவைத் தொகுதியில் நேற்று அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் பாஜக குண்டர்களால் நடத்தப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலைத் தாக்கியவர்கள் யார் எனக் கூர்ந்து கவனித்தால், அதில் ஒருவரின் பெயர் ஷங்கி என்று தெரிகிறது. அவர் பாஜகவில் துணைத் தலைவராக உள்ளார். அவர் தனது பகுதியில் அடிக்கடி பர்வேஷ் வர்மாவின் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பிரச்சாரங்களின் போது பர்வேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார். அவருக்கு நெருக்கமானவராகவும் உள்ளார்.