கேதார்நாத் பகுதிக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் வர தடை விதிக்க வேண்டும் என கேதார்நாத் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஆஷா நவுதியால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கேதார்நாத் பகுதி மக்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது, கேதார்நாத்துக்கு வரும் இந்துக்கள் அல்லாதவர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தப் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். இப்பகுதி வர்த்தகர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்” என்றார்.