ஆலப்புழா: கேரளாவில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களில், முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் திங்கள்கிழமை இரவு ஒரே காரில் திரைப்படம் பார்க்க சென்றனர். விடுதியில் இருந்து ஆலப்புழா டவுனில் உள்ள திரையரங்குக்கு அவர்கள் சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. செங்கன்சேரி முக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் அதிவேகமாக மோதியது.