திருவனந்தபுரம்: கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.