சென்னை: கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மார்ச் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கழிவுகளை கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.