கொடைக்கானல்: பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடிய வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வாகன சோதனையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் கொண்டுவரப்பட்டால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கொடைக்கானல் மலை பகுதியில் நெகிழி பொருட்கள், 5 லிட்டர் கேனுக்கு கீழ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழி பொருட்களையோ, 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் கேன்களையோ கொண்டு வந்தது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
The post கொடைக்கானல்; பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் கொண்டுவரப்பட்டால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.