சென்னை: முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 மாதங்களை நிறைவு பெற்றுள்ள நிலையில், அங்கு ரூ.60 லட்சத்தில் வாகன நிறுத்தம் மற்றும் உணவு அருந்துமிடம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழிற்கல்வி பெற்றவர்கள் புத்தொழில் நிறுவனங்களை தொடங்க, உட்கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்புக்காக பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராக விலை உயர்ந்த நூல்களை வாங்கி படிக்க முடியாத நிலை உள்ளது.