செங்கல்பட்டு : கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனத்திற்கு திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜன் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். ஹெலிகாப்டரில் சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
The post கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதித்தது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்!! appeared first on Dinakaran.