கோவை நகரிலுள்ள பெரியகடை வீதி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரின் அறைக்குள் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்து போன நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், காவல் பணியில் இருந்த காவலருக்குத் தெரியாமல் மாடிக்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இது லாக்கப் மரணம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.