நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தை இரா.சரவணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.குரு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதில் பரத், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் மேகா செட்டி, மாளவிகா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கின்றனர்.