சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.