லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.