பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து பஸ்தர் ரேஞ்ச் காவல்துறை ஐஜி சுந்ததரராஜ் கூறுகையில், "இந்திராவதி தேசிய பூங்காவுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் எதிர்ப்பு கூட்டு தேடுதல் வேட்டையின் போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. நக்சல் எதிர்ப்பு தேடுதல் வேட்டையில் மாவட்ட பாதுகாப்புப் படை (டிஆர்ஜி), சிறப்பு புலனாய்வு படை (எஸ்டிஎஃப்) மற்றும் மாவட்ட படை ஆகியோர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.