இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கு வருகை தரும் முன்பாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தர் உடன் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நடத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இரு தலைவர்களும் வலுவான பாகிஸ்தான் – ஈரான் உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.