சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: பெருந்தொழிற்சாலைகள் மின் உற்பத்தியை பெருக்கி கொண்டிருந்த காலத்தில் கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் மின் வசதி குறித்து சிந்தித்தவர்கள் நாம். ஏழை, எளிய, நகர்புற மக்களுக்கு பன்னடுக்கு குடியிருப்புகளை உருவாக்க தனி வாரியம் அமைக்கப்பட்டதும் இங்குதான். மகளிருக்கும் வாக்குரிமை வழங்கியதில் முன்னோடியான நமது மாநிலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதிலும் முன்னணி மாநிலமாகும். எவ்வித சமரசத்திற்கும் இடம் தராமல் இரு மொழி கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றுவதால் தமிழ் பண்பாட்டை பாதுகாத்தது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தின் துணையோடு உலகை வெல்லும் தணியாத தாகம் கொண்டு நமது இளைஞர்கள் வலம் வருகிறார்கள்.
The post சமரசமில்லா இருமொழி கொள்கை: கடைக்கோடி கிராமத்திற்கும் மின்வசதி appeared first on Dinakaran.