சென்னை: சமுக ஆர்வலர் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார். சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்றும் கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேதகத்துக்குரியவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:
சமுக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள், கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யபட்டனர். முதலமைச்சராக இருந்த பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறி பரப்பலாமா? என கூறியுள்ளார்.
The post சமுக ஆர்வலர் கொலை வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்: அமைச்சர் ரகுபதி உறுதி appeared first on Dinakaran.