திண்டுக்கல்: சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, திண்டுக்கல் மாநகர கிளை சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கவிவாணன் தலைமை வகித்தார். கவிஞர் தாமோ எழுதிய 'பகலைத்தொடாத வெளிச்சம்' என்ற நூலை வெளியிட்டு முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பேசுகையில், ''சமூக விரோதிகள் தற்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த நல்ல வார்த்தைகளும் வராது. அவர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. வலைதளத்தில் என்ன பதிவிட்டு இருக்கிறதோ அதை கண் மூடி பதிவிடுவதை வேலையாக வைத்திருக்கிறார்கள்.