காசியாபாத்: "சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார், ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது" என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எம்பிகள் தடுத்தநிறுத்தப்பட்ட பின்பு வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.