பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது.
ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது.