சென்னை: நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய 'கோவிந்தா… கோவிந்தா…' பாடல் நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா… கோவிந்தா…' பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.