புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற இருக்கிறார். இந்திய விமான படையில் விமானியாக பணியாற்றி நீட்ட அனுபவம் பெற்ற இவர். AX-4 என்ற விண்வெளி பயண திட்டத்தில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் வவிமானியாக இருப்பார். ஏக்ஸியம் ஸ்பேஸ், நாசா இணைந்து ஏப்ரல் – ஜூன் இடையே ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இந்த 4வது தனியார் விண்கலத்தில் அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரரான உள்ளிட்ட 4 பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த 4 பேரில் விண்கலத்தை செலுத்துபவராக இந்தியாவில் சுபான்ஷு சுக்லா இருப்பார் என்றும், 4 பேரும் 14 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து பல்வேறு ஆரய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் விண்வெளியில் யோகா செய்து இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்ற போவதாக சுக்லா தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் சுக்லா இந்த ஆண்டு மே மாதம் இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படும் ககன்யான் விண்கலத்திலும் பயணம் செய்ய உள்ளார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா!
* உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா.
* 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர்.
* சுக்லா இந்திய விமானப்படையின் விமானங்களான Sukhoi-30 MKI, MiG-21S, MiG-29S, Jaguar, Hawks Dorniers மற்றும் N-32 போன்றவற்றை இயக்கி உள்ளார்.
* 1984ம் ஆண்டு முதல் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா இருப்பார்.
The post சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..!! appeared first on Dinakaran.