
கொல்கத்தா: தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்திருந்தது. தொடர்ந்து சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்திருந்தது.

