ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதினார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 16-21, 21-12, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-23 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் கிட்டினுபோங் கெட்ரென், டெச்சாபோல் புவரனுக்ரோ ஜோடியிடம் வீழ்ந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18, 15-21, 19-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பாங் ரான் ஹூ, சு யின் செங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.