துபாய்: ஐசிசி தொடர்கள் மற்றும் அதன் பைனல்கள் என்று வந்துவிட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தவிர்க்க முடியாதவை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த அணிகளின் கடந்த கால செயல்பாடு அப்படி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.