புதுடெல்லி: எந்தவொரு துறையிலும் உயர் பதவியை பிடிக்க விடாமுயற்சி இருந்தால் அது சாத்தியமாகும் என்பது ஜூலியா ஸ்டீவர்ட்டின் வாழ்க்கையிலிருந்து உறுதியாகி உள்ளது.
1990-களின் பிற்பகுதியில் ஆப்பிள்பீ நிறுவனத்தில் பணியாற்றியபோது அவர் ஒருபோதும் தலைமை செயல் அதிகாரியாக வரமுடியாது என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தை கடுமையான உழைப்பின் மூலம் லாபகரமான பாதைக்கு அழைத்து சென்றபோதும் அவருக்கு உயர் பதவி மறுக்கப்பட்டது. இதனால், அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர் அதன் போட்டி நிறுவனமான ஐஎச்ஓபி கேஷுவல் டைனிங்கில் இணைந்து கடுமையாக பணியாற்றி தலைமை நிர்வாகியானார். அதன்பின்னர் அந்த நிறுவனத்தில் கடுமையாக உழைத்த அவர் தான் வேலைபார்த்த ஆப்பிள்பீ நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். 2.3 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,000 கோடி) ஆப்பிள்பீ நிறுவனத்தை வாங்கிய ஜூலியா தனக்கு சிஇஓ பதவியை வழங்காத முதலாளியை அந்த நிறுவனத்தை விட்டே நீக்கினார்.