மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த ஏப். 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 8 மணியளவில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வீதியுலா வந்தனர். 8ம் நாளான இன்று இரவு 7.35 மணியில் இருந்து 7.59 மணிக்குள், அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன், மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிப்பார். பின்னர் தங்க, வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருள்வர்.
The post சித்திரை திருவிழா மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் appeared first on Dinakaran.