புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரான்சின் ரபேல் போர் விமானங்களும் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான லட்சுமண ரேகையைத் தாண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.