சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க கல்லூரி பின்னணியில் இதன் கதையினை உருவாக்கி இருக்கிறார்.